Showing posts with label உரத்த சிந்தனை. Show all posts
Showing posts with label உரத்த சிந்தனை. Show all posts

Friday, May 30, 2014

பசுவை லட்சுமியாக வழிபடுவது ஏன்?




இந்தியர்கள் பசு மாட்டை லட்சுமியாக வழிபடுவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். பசுவை மிகப் பெரிய சொத்தாகவும் நம்மவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இன்றைய காலத்தைப் போல விளம்பரங்களினால் இத்தகைய நடைமுறை வந்திருக்காது. நம்முன்னோர்கள் எல்லாவற்றையும் சிறந்த காரணங்களுக்காகத்தான் செய்திருகிறார்கள். 

மனிதன் சாப்பிடத்தக்க உணவுகளில் மிகவும் குறைந்த நேரத்தில் உற்பத்தியாகக் கூடியது பால் மட்டும் தான். இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை உட்கொள்ளலாம். உயிர்வாழத்தேவையான எல்லா சத்துக்களும் இதில் உள்ளன. பால் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள் இலை தழைகள், புல் மற்றும் வைக்கோல். இவையோ பாலைவனம் இல்லாத பகுதிகள் அனைத்திலும் நிரம்பி இருக்கும். பசு மாட்டினால் 4 மணி நேரத்தில் இலைதழைகளிலிருந்து மனிதன் உண்ணக்கூடிய உணவு பாலாகக் கிடைத்துவிடும். வேறெந்த முறையிலும் இந்த சிறிய நேரத்தில் உணவு உற்பத்தி சாத்தியமில்லை.

மேலும் பசுவின் சாணம் மற்றும் சிறு.நீர், நுண்கிருமிகளைக் கொன்று சுற்றுப்புரத்தை தூய்மையாக வைக்க உதவ வல்லது. 

எனவே பசுவைப் பேணிக் காப்பது மிகவும் அவசியம். பசுவைத் தெய்வமாகக் கொண்டாடினால் இந்தச் செயல் சிறப்பாக நடந்துவிடும் என்பதால் பசுவை லட்சுமியாக்கியிருக்கலாம்.

இந்த சிந்தனைக்குப் பிறகு இப்பொழுதெல்லாம் பசுவைத் தெய்வமாகப் பார்க்கத் தோன்றுகிறது.
.