Sunday, June 26, 2011

மதிக்கப்படும் உறவுகள்

சிறுவர்கள் விளையாடுவதைப் பார்ப்பது எப்பொழுதும் ஆனந்தமான ஒரு விஷயம் தான். அன்றும் அப்படித் தான் இரண்டு சிறுவர்கள் சைக்கிள் ஓட்டி விளையடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சற்று ஓய்வாய் நின்ற பொழுது அவர்களுடைய உரையாடல்

' நளைக்கி எங்க தாத்தா வர்ராங்க. ரொம்ப ஜாலிடா. ஸ்கூட்டரில்ல ஸ்கூலுக்கு வருவேன், அப்புறம் இந்த சைக்கிளை சர்வீஸ் செய்து தருவார். கடைக்கி போகும் போது, கூட போனால் சாக்கலெட் கிடைக்கும். '

' பாட்டியும் தானே வர்ராங்க.'

பாட்டி எப்பப் பார்த்தாலும் டிவி பார்க்கும். என்னைய மட்டும் படி படின்னு சத்தம் போடும். பெரியப்பா விட்டிலே அது இருந்தாகூட நல்லா இருக்கும்.'

தாத்தா மட்டும் மதிக்கப்படும் உறவாக இருக்கிறார். பட்டியோ மதிப்பை இழந்து நிற்கிறார்.

இந்த உரையாடல் என்னை வெகுவாக சிந்திக்க வைத்தது. ஒவ்வொறு உறவுகளையும் நாம் ஏன் மதிக்கிறோம்? யாரெல்லாம் நம் உள்ளத்தில் நிறைந்து நிற்கிறார்கள்?

நம்முடைய அன்றாட வாழ்கையில் எதாவது ஒரு வழியில் பங்கீடு இருந்தால் தான், மதிப்பிற்குரியவராக ஒருவர் மாற முடிகிறது. இல்லையென்றால் எந்த வகையில் சொந்தமானாலும் மதிப்பைப் பெறமுடிவதில்லை.

நாம் சந்திக்கும் ஒவ்வொறுவரின் மதிப்பையும் பெருவது சாத்தியமா?
இது சுலபமான ஒன்றானுலும் நம்மில் அதிகம் பேர் இந்த முறையைக் கையாள்வதில்லை. முழு கவனத்தையும் ஒருவர் பக்கம் திருப்பி புன்னகை புரிவதே இந்த முயற்சியில் முதல் படி. அடுத்து அவருக்கு நம்மால் என்ன பயன் கொடுக்க முடியுமோ அதைச் செய்வது.

ஒரு கடைக்கே செல்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். புன்னகையுடன் கடைக்காரரிடம் பேசிப் பாருங்கள். எதாவது ஒரு பொருளையாவது வாங்க ஆர்வம் காண்பியுங்கள். விலை காரணமாகவோ வேறு காரணமாகவோ அவரிடம் பொருள் வாங்க முடியவில்லையென்றால், நசுக்காக நட்புடனே வெளியேறி. விலையைக் குறைக்கச்சொல்லி மன்றாடாதீர்கள். ஜவுளிக் கடைக்குச் சென்றால் வாங்க விரும்புகிற விலையில் மட்டும் துணிகளை எடுத்துப் போடச் சொல்லுங்கள். கடையையே புரட்டிப் போட்டுவிட்டு ஒரு டிசைனும் நல்லா இல்லை என்று சொல்லிவிட்டுப் போவதை தவிர்த்துத்தான் பாருங்களேன். வடிக்கையாளர் உரிமை என்று எதையாவதைப் பேசி சண்டைக்கு இழுக்காதீர்கள்.
விடுங்கள்

உறவுகள் மேம்பட என்று 25 விஷயங்களை எழுதி மாட்டி வைத்திருந்தாலும், நம்மால் பிறருக்கு பயனுள்ள படி நடந்து கொள்வதே ஒரே வழி.

இன்றைய கலாச்சாரத்தில் அத்தியாவசியத் தேவைகளாக நியாயப்படுத்தப் படுபவை.

  1. ஒரு வீடு-சில பல லட்சங்கள் மதிப்பில்
  2. கொஞ்சம் இன்னும் இன்னும் கொஞ்சம் தங்கம்
  3. மகன் மகள் இஞ்ஜினியரிங்க் படிப்பு, MBA படிப்பு, மருத்துவக் கல்வி
  4. மகளின் திருமணம், அயல்நாட்டு மாப்பிள்ளை.
  5. மூர்ச்சையாக்கும் மருத்துவச் செலவு.
  6.  கடைசி காலத்திற்காக கொஞ்சம் சேமிப்பு.
இவை அத்தனைக்கும் பொருள் சேர்க்க வேண்டும். இதில் எல்லாம் ஜெயிக்க ஓடும் மக்கள் மத்தியில் உறவுகளைப் பற்றி சிந்திப்பதற்குக் கூட நேரம் இல்லை.

எனவே யாரையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு அமைகிறதோ அவர்கள் தான் நம் உறவு. இதில் உடன் பணி செய்பவர்கள், அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் பிரதானமானவர்களாக ஆகியிருப்பதை உணருங்கள்.

கொடுப்பதால் மட்டுமே உறவுகள் செழிக்கும். நீங்கள் மதிக்கப் படுவீர்கள்.

கேளுங்கள் தரப்படும். ஆனால் பெறப்பட்டவை இலவசங்களல்ல.

உங்களுக்கு இருக்கும் ஒவ்வொறு உரிமைகளின் பின்னாலும் ஒவ்வொரு கடமைகள் இறுப்பதை உணருங்கள்.

There is no free lunch -(உணவுகூட இலவசமில்லை) என்பது ற்றுக் கொள்ள வேண்டிய யதார்த்த உண்மை.