Friday, May 30, 2014

பசுவை லட்சுமியாக வழிபடுவது ஏன்?
இந்தியர்கள் பசு மாட்டை லட்சுமியாக வழிபடுவதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன். பசுவை மிகப் பெரிய சொத்தாகவும் நம்மவர்கள் கருதி வந்திருக்கிறார்கள். இன்றைய காலத்தைப் போல விளம்பரங்களினால் இத்தகைய நடைமுறை வந்திருக்காது. நம்முன்னோர்கள் எல்லாவற்றையும் சிறந்த காரணங்களுக்காகத்தான் செய்திருகிறார்கள். 

மனிதன் சாப்பிடத்தக்க உணவுகளில் மிகவும் குறைந்த நேரத்தில் உற்பத்தியாகக் கூடியது பால் மட்டும் தான். இதைக் குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை உட்கொள்ளலாம். உயிர்வாழத்தேவையான எல்லா சத்துக்களும் இதில் உள்ளன. பால் உற்பத்திக்குத் தேவைப்படும் மூலப்பொருள் இலை தழைகள், புல் மற்றும் வைக்கோல். இவையோ பாலைவனம் இல்லாத பகுதிகள் அனைத்திலும் நிரம்பி இருக்கும். பசு மாட்டினால் 4 மணி நேரத்தில் இலைதழைகளிலிருந்து மனிதன் உண்ணக்கூடிய உணவு பாலாகக் கிடைத்துவிடும். வேறெந்த முறையிலும் இந்த சிறிய நேரத்தில் உணவு உற்பத்தி சாத்தியமில்லை.

மேலும் பசுவின் சாணம் மற்றும் சிறு.நீர், நுண்கிருமிகளைக் கொன்று சுற்றுப்புரத்தை தூய்மையாக வைக்க உதவ வல்லது. 

எனவே பசுவைப் பேணிக் காப்பது மிகவும் அவசியம். பசுவைத் தெய்வமாகக் கொண்டாடினால் இந்தச் செயல் சிறப்பாக நடந்துவிடும் என்பதால் பசுவை லட்சுமியாக்கியிருக்கலாம்.

இந்த சிந்தனைக்குப் பிறகு இப்பொழுதெல்லாம் பசுவைத் தெய்வமாகப் பார்க்கத் தோன்றுகிறது.
.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மைகள்...

Venkat S said...

திண்டுக்கல் தனபாலன் அவர்களே,
தங்கள் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

ரூபன் said...

வணக்கம்

இந்துக்களின் தெய்வம்
சிவபெருமானின் வாகனம் கூட எருதுதான்... நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கோவி.கண்ணன் said...

//இந்த சிந்தனைக்குப் பிறகு இப்பொழுதெல்லாம் பசுவைத் தெய்வமாகப் பார்க்கத் தோன்றுகிறது.//

அப்பறம் ஏன் நான்கு கன்று ஈன்ற பிறகு மடி வற்றிய மாட்டை கேரளவுக்கு அனுப்பும் அடிமாட்டுக்காரனுக்கு அனுப்புகிறார்கள், மாடு வளர்ப்பவர் யாரும் அதை சாகும் வரையில் வைத்திருந்து பார்த்ததில்லை, அடிமாட்டு பசுவும், முதியோர் இல்லத்து தாயும் ஒன்று தான் என்பதை ஒப்புக் கொள்வீர்களா ?

Anonymous said...

//நம்முன்னோர்கள் எல்லாவற்றையும் சிறந்த காரணங்களுக்காகத்தான் செய்திருகிறார்கள். //

நீங்கள் கூறும் காரணங்கள் வட மாநில எருமைகளுக்கும் லடாக் போன்ற பகுதிகளில் வளர்க்கப்படும் யாக் போன்ற மிருகங்களுக்கும் கூட பொருந்தும்.

Venkat S said...

திரு. ரூபன் மற்றும் கோவி.கண்ணன் இருவரின் வரவிற்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. மற்றுமொரு பின்னூட்டத்தில் பெயரையும் வெளியிட்டுருந்தால் நன்றாக இருக்கும். அவருக்கும் நன்றி,
கோவி.கண்ணன் அவர்களின் கேள்வி சுவராசியமானது.
பலன்களை கொடுக்கும் வரைதான் அல்லது பலன்கள் கிடைக்கின்றன என்ற நம்பிக்கை இருக்கும் வரைதான் தெய்வமாக வழிபடுவது என்ற கலாச்சாரம் வளர்ந்து விட்டது, வயதான பசுக்களைக் கொண்டு விடுவதற்கு கோவில்களில் ஏதோ அமைப்புக்கள் இருந்திருக்க வேண்டும். கிருஷ்ணரின் ஜன்ம பூமியாகிய மதுராவில் பக்கத்தில் உள்ள விருந்தாவனத்தில் இத்தகைய கோசாலை இருக்கிறது, அதற்காக நன்கொடை வசூல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். முதியோர் இல்லங்களும் அந்தவகையான அமைப்பு தான் போலும்.

இன்றைய கலாச்சாரம் பணத்தை மிகவும் பிரதானமாக ஏற்றுக் கொண்டுள்ளது. பால் உற்பத்தி, தொழிற்சாலைக் கலாச்சாரத்திற்கும், சந்தைக் கலாச்சாரத்திற்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறது, பால்தராத பசுக்களை மாமிசமாக்குவதும் தொழிற்சாலைக் கலாச்சாரத்தின்பாற்பட்டதே. மாடுவளர்ப்பவர்கள் மாட்டைத் தெய்வமாகப் பார்க்கிறார்களா என்பது கேள்விக் குறி.சடங்குகளில் தான் மாட்டுக்கு லட்சுமி என்ற அந்தஸ்த்து. பெற்றோருக்கும் அப்படித்தான் என்றாகிவிட்டதோ?.

Post a Comment