Sunday, August 23, 2015

இயற்கை நல வாழ்வு முகாம்.—பகுதி 4

நல்லவேளை !! ஏதோ திடஉணவு தட்டுகளில் பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. மதியம் நீராகாரம் இல்லை போலும் என்றெண்ணி சற்று மகிழ்ச்சியாக வரிசையில் நின்று கொண்டேன்.

இனிப்பு அவல் 50 கிராம் அளவு,
ஊறவைத்த நிலக்கடலை 75 கிராம்,
மூன்றில் ஒரு பங்கு பப்பாளிப் பழம்150கிராம், முட்டைகோஸ்,கேரட்,கொத்தமல்லிக் கீரை அரிந்து வைத்தது ஒரு கரண்டி 50 கிராம் அளவில்,
பேரிச்சம் பழம் 3 என்ணிக்கை,
சிறிய சப்போட்டாப் பழம் 2 எண்ணிக்கை.

மதிய உணவு போதுமானதாக இருந்தது. உணவருந்தி முடித்துவிட்டு 3 மணிவரை ஓய்வெடுத்துக் கொண்டோம். பிறகு உணவைப்பற்றிய இரண்டு மணி நேர வகுப்பு. பல அரிய தகவல்களை நாங்கள் அறிந்துகொண்டோம். அவற்றில் ஒரு சில:
1.   புரோட்டா, பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் குளிர்பானங்கள் முதலியன தவிர்க்கப் பட வேண்டிய நச்சு உணவுகள்.
2.    பன்னாட்டு உணவுக் கடைகளில் கிடைக்கும், பொரித்த கோழி மற்றும் மைதா ரொட்டிகள் குப்பை உணவுகள் என்று அவர்கள் நாட்டிலேயே பெயரிடப்பட்டவைகள். நாம் நாகரீகம் கருதி இவைகளைச் சாப்பிட்டு வினையை ஏன் விலைகொடுத்து, அதிலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் ?
3.   சீனி சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள். அல்வா, ஜாங்கிரி, மைசூர்பா, பால் கோவா…. என்று அள்ளி அள்ளி நாம் தின்று கொண்டு விழாக்களைக் கொண்டாடுகிறோம் !!
4.   முதல் மதிப்பெண் வாங்க, உயரமாக வளர, சரியாக சாப்பிட நேரமில்லை என்றாலும் உங்களுக்கு சக்தி கொடுக்க என்று பன்னாட்டு நிறுவனங்களும், இந்திய கார்பரேட் நிறுவனங்களும் போட்டி போட்டு நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்களுக்கு விற்கும் பல ஆரோக்கிய பானங்கள் வெகுவாக நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கக் கூடியவை. முறையான உணவு பழக்கத்திற்கு மாற்று எதுவும் இருக்க முடியாது.
5.   சில பற்பசைகளில் நிக்கோட்டின் கலக்கப் பட்டிருக்கிறது. இது வாடிக்கையாளர்களை அடிமைப் படுத்தச் செய்யப்படும் சூது.

இப்படி பல கருத்துகள் வகுப்பில் சொல்லப்பட்டன.

ஊடகங்களில் சிந்தையைக் கொள்ளை கொள்ளும் விளம்பரங்கள் மற்றும் முற்பட்ட சமுதாயத்தினர்களின் பெருமை பேசி பீற்றிக்கொள்ளும் மனப்பான்மை இவைகளின் வாயிலாக இன்றைய உணவுப் பழக்கங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஊறு விளைவிப்பவைகளாக மாற்றம் கண்டு கொண்டு இருக்கிறது. இதையெல்லாம் கேட்ட எனக்கு கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன.

குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்

குருட்டு உலகமடா _ இது

கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டும்

திருட்டு உலகமடா _ தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்

திருந்த மருந்து சொல்லடா


விளையும் பயிரை வளரும் கொடியை

வேருடன் அறுத்துவிளையாடும் _ மனம்

வெந்திடும் தோட்டக்காரனிடம்

மிரட்டல் வார்த்தைகளாடும் _ பல

வரட்டுக் கீதமும் பாடும் _ விதவிதமான

பொய்களை வைத்துப் புரட்டும் உலகமடா _ தம்பி

தெரிந்து நடந்து கொள்ளடா _ இதயம்

திருந்த மருந்து சொல்லடா

இந்த வகுப்பு முடிந்ததும் மாலை 5.30 மணிக்கு உடற்பயிற்சி வகுப்பு. அன்றைய வகுப்பில் நாங்கள் கற்றது உடற்பயிற்சிகளில், உலகத்திலேயே மிக மிக சிறந்த, அருமையான பயிற்சி. இது ஒன்றுமட்டுமே நம் ஆரோக்கிய வாழ்வுதனை காக்கும் சிறப்பு பெற்றது.
அது என்னவென்று தெறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா??
தொடரும்…


9 comments:

S.Venkatachalapathy said...

எதைச் சாப்பிடலாம் எதைச் சாப்பிடக் கூடாது என்று தெரிந்துகொள்ள 5 நிமிடம் ஒதுக்கிப் படித்துப் பாருங்களேன்.

Anonymous said...

இந்த இடம் பற்றி ஏதும் வெப் சைட் உள்ளதா?

S.Venkatachalapathy said...

நான் எழுதுவது கற்பனைக் கதையல்ல. உண்மைச் சம்பவம்.இந்த இடத்திற்குப் பயணிக்க அடியில் காணும் வலைதள முகவரியைச் சொடுக்கவும். Anonymous பின்னூட்டம் இடாமல் முகவரியுடன் கூடிய பின்னூட்டம் இன்னும் உற்சாகப்படுத்துமே.
http://www.aravindhherbal.com/

Parvatham said...

Man learns a lot through his own experience. As his life is so short he learns from others' experience too. In that context I am learning a lot through your experience at this naturopathy camp;

Kalai said...

Nice narration. I am asking the same question that anonymous asked: இந்த இடம் பற்றி ஏதும் வெப் சைட் உள்ளதா? Or could you please provide the name and contact info.of this place. Thanks.

S.Venkatachalapathy said...

இந்த இடம் ராஜபாளையத்தில் உள்ளது. இதைப் பற்றிய முழுவிபரங்கள்
http://www.aravindhherbal.com/

என்ற வலைதளத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம். ராஜபாளையம் மதுரைக்குத் தென்மேற்குதிசையில் சுமார் 85 கிமீ தொலைவில் உள்ளது. இந்த இடத்துக்கு நான் எப்படிச் சென்றேன் என்ற முழுவிபரமும் பகுதி 1 நான் சொல்லியிருக்கிறேன்.
உங்களுடைய வசதிக்காக இந்த அமைப்பின் தொலைபேசி எண் 04563233308

Unknown said...

உடற்பயிற்சி பற்றி தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்

Unknown said...

ஐயா எனக்கு சுகர் 5 வருடமாக 300 மேலே உள்ளது எனக்கு என்ன சாப்பீடா எதை சாப்பீடா தெரியவில்லைguide மீ

S.Venkatachalapathy said...

சக்கரை வியாதி இருப்பதாக பலரை நம்ப வைத்துப் பணம் சம்பாதித்து வருகின்றனர். உங்கள் கேள்விக்கு ஓரிரு வரிகளில் பதில் சொல்ல முடியாது. மேலும், நான் ஒன்றும் மருத்துவன் அல்ல. என்னுடைய சிந்தனைகளை, என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களின் அனுபவங்களை வேறு ஒரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

Post a Comment